அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் தொடர்ந்து 14- ஆண்டுகளுக்கு மேலாக காவேரி , வைகை , பாலாறு , தாமிரபரணி , தென்பெண்ணை , நொய்யல் என தமிழகத்தில் தலைசிறந்த நதிகளின் தூய்மை மற்றும் புனிதம் காக்க ஆண்டுதோறும் யாத்திரை மற்றும் பெருவிழாவினை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பரில் சேலத்தின் மையத்தில் பாய்ந்து நஞ்சை இறையாறில் காவிரியில் சங்கமிக்கும் பஞ்சாட்சரமே நதியாக பஞ்சபாண்டவர்கள் வணங்கிய , ஔவையார் பூஜித்த , ஐந்து சிவாலயங்களை கொண்ட புனித நதியான சேலம் திருமணிமுத்தாறு நதிக்கு சேலம் தெய்வீக திருமண மண்டபத்தில் 12 நாட்கள் மாநாடு நடைபெற உள்ளதால் முதல் ஆலோசனைக் கூட்டம் சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள சுபிக்ஷா மஹாலில் நடைபெற்று.

இந்த ஆலோசனைக் கூட்டம் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் தவத்திரு.சுவாமி இராமானந்தா மற்றும் பொதுச்செயலாளர் சுவாமி ஆத்மானந்தா சரஸ்வதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் மாநாட்டின் பொறுப்பாளர்களான பல்வேறு அமைப்பினை சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *