சீர்காழியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கொள்ளிடம் ஒன்றியம் சார்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் விருது பெற்ற பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டுவிழா மற்றும் விருது பெற்ற பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா மாநில தலைவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் விழாவிற்கு ஒன்றிய தலைவர் குமார் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் மேகலா, ஒன்றிய செயலாளர் ராஜ ரெத்தினம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர். விழாவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் இலா . தியோடர் ராபின்சன், மாநிலத் தலைவர் அண்ணாதுரை, மாநில துணை பொது செயலாளர் ரவி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச் செயலாளர் இலா . தியோடர் ராபின்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடமும் தமிழ்நாடு முதல்வரிடமும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாகவும், டிட்டோ ஜாயிண்ட் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாகவும் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எங்களது கோரிக்கைகளை எல்லாம் கனிவோடு பரிசிலித்து அதனை நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன் பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும்.

அதே போல் 2006 முதல் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்கள் பெறுகின்ற அந்த ஊதியம் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களும் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வியில் 243 என்ற அரசாணை போடப்பட்டு ஒன்றியங்கள் தோறும் இருந்த யூனிட் மாற்றப்பட்டு மாநிலங்கள் தோறும் ஒரே சீனியாரிட்டி, ஒரே முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை உடனடியாக கைவிட்டு பழைய முறையை தொடர வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

ஐ.எப்.ஆர் எஸ் என்ற திட்டத்தின் கீழே நீதித்துறையின் சாப்ட்வேரில் மாதம் தோறும் வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். அது ஆசிரியர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்களுக்கும் இக்கட்டான, ஆபத்தான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதுவரை நாங்கள் முறையாக பிப்ரவரி மாத வருமான வரி கணக்கிட்டு அரசுக்கு செலுத்தி வருகிறோம். இப்படி இருக்கிற சூழ்நிலையில் மாதந்தோறும் பிடித்தம் செய்வதாக பதினோரு மாதங்களுக்கு கணக்கிட்டு 10% பிடித்தம் செய்வது ஏற்புடையதாக இல்லை. சரியான முறையில் வருமான வரி ஆசிரியர்கள் செலுத்தி வரும் நிலையில் தற்போது புதிதாக நிதி துறையில் அறிமுகப்படுத்தியுள்ள மாதந்தோறும் பிடித்தம் செய்கின்ற திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். ஊக்க ஊதிய உயர்வை 6 சதவீதமாக இருந்தவற்றை லம்சமாக மாற்றியுள்ளதை ரத்து செய்து பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச
கோரிக்கைகள் எல்லாம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அப்போது வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானப் புகழேந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *