மீன்சுருட்டி அருகே  மேலணிக்குழி ஊராட்சித் தலைவரை கண்டித்து சாலை மறியல் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மேலணிக்குழி ஊராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரி, ஊராட்சி தலைவர் துரை முத்துக்குமாரசாமி
தலைமையில் ஊழியர்கள். ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி வருகிறார்கள்

அப்பொழுது ஏரியை அப்பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மதிமுக மாவட்ட கவுன்சிலருமன கந்தசாமியின் சண்முக விலாஸ் மளிகை கடையில் சில அடிகள் ஆக்கிரமித்து உள்ளது தெரிய வந்தது

இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக தொழில் அதிபர் கந்தசாமி உட்பட பலரது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

தொடர்ந்து  தூர்வாரப்பட்டு வருகிறது. ஏரியிலிருந்து தூர்வாரப்படும் மண் ஏரியின் ஓரப்பகுதியில் கரையை பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ஏரியின் அருகே பிரபலமான தொழிலதிபரும் மதிமுக மாவட்ட கவுன்சிலருமன கந்தசாமியின் சண்முக விலாஸ் மளிகை கடையின் குடோன் உள்ளது. குடோனை  ஒட்டி ஏரியின் கரை உள்ளதால். ஏரியின் நான்கு புறத்திலும் மண்ணைப் போட்டு உயர்த்தி உள்ளனர்.

ஆனால் குடோன் உள்ள பகுதியில் வேண்டுமென்றே சுமார்  பத்தடி அளவிற்கு மண்ணைப் போட்டு உயர்த்தி உள்ளனர்.

இதனால் குடோனின் ஷட்டர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் ஏரியின் தண்ணீர் குடோனிற்குள் வர  வாய்ப்பு உள்ளது.

மேலும்  ஒரு குடோனில் இருந்து பின்பக்க வழியாக மற்றொரு குடோனுக்கு ஊழியர்கள் சென்று வந்த  பாதையும் ஏரியின் கரை பலப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டது.  

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் குடோனின்   ஷட்டர்  திறக்க வழி செய்ய மண்ணை அகற்றவும் மற்றும் ஒரு குடோனில் இருந்து மற்றொரு குடோனிற்கு  செல்ல நடைபாதை ஏற்படுத்தி தர  முறையிட்டுள்ளனர்.

ஊராட்சி தலைவர் துரை முத்துக்குமாரசாமி மறுத்ததை தொடர்ந்து.   அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் கந்தசாமி தலைமையில் அக்கடையின் ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ய முடிவு செய்து

கடையை மூடினர். இதை அறிந்த  அப்பகுதி அனைத்து  அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மற்றும் கடையின் ஊழியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர்  கடையின் முன் குவிந்தனர்.
பின்னர் காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் அமர்ந்து எம் எஸ் கந்தசாமி தலைமையில் கடை ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி  இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்,
சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து அனைவரும் ரோட்டில் படுத்து சாலை மறியலில் தீவிரப்படுத்தினர்

பின்பு சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் டி எஸ் பி ராமசந்திரன் மற்றும் மேலணிக்குழி
விஏஓ ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி   மேலும் இதில் நீதிமன்ற வழக்கு இருப்பதால் இருவரும் நீதிமன்றத்தின் மூலமும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மற்றும் தகவல் தெரிவித்து. ஷட்டரை திறக்க மற்றும் ஊழியர்கள் சென்று வர பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து தொழிலதிபர் கந்தசாமி தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் ஊழியர்கள் சாலை மறியலில் கைவிட்டனர்.

தொடர்ந்து கடை திறக்கப்பட்டுள்ளது இது மேலணிக்குழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *