சு ஆடுதுறை, குற்றம் பொருத்த ஈஸ்வரர் ஆலயத்தில், நித்திய பூஜை வழக்கம் போல் நடைபெற பொதுமக்கள் சார்பில் முதல்வருக்கு புகார் மனு.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட சு. ஆடுதுறையில் சுமார் 1200 வருடங்கள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீ குற்றம் பொருத்த ஈஸ்வரர் ஆலயம் இருக்கின்றது.

இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். இங்கு மாசி மாதத்தில் நடைபெறும் மாசி மகா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

கடந்த சில ஆண்டுகளாக மாசி மகா திருவிழா ஏனோ தானோ என்று நடைபெற்றதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பேச்சு இருக்கின்றது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் ஆணைக்கு இணங்க ஆலய திருப்பணிக்காக இக்கோவிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பணி தொடங்கப்பட்டும் அனைத்து ஆலயங்களிலும் உட்பரிவாரங்களுக்கு மட்டுமே பாலாயினம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்குவது முறையாகும்.

ஆனால் மூலவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைக்கள் தங்கு தடை இன்றி நடைபெறும் என்பது இந்து சமய ஆகம விதியாகும். ஆனால் ஸ்ரீ குற்றம் பொருத்த ஈஸ்வரர் ஆலயத்தில் கடந்த 14. 12. 2023 மற்றும் 15. 12. 2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு யாகங்கள் செய்யப்பட்டு முறையாக பாலாயினமும் செய்யப்பட்டது. ஆனால் இந்து சமய ஆகம விதிக்கு புறம்பாக ஸ்ரீ குற்றம் பொருத்த ஈஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்கும் சேர்த்து பாலாயினம் நடைபெற்றதின் காரணமாக தற்போது மூலவருக்கு எவ்வித அபிஷேகமும் செய்யப்படவில்லை.

நித்திய பூஜை முறையாக எதுவும் நடைபெறவில்லை. இந்த நிகழ்வு ஊர் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் எங்கள் மக்களின் கோரிக்கையை முறையாக பரிசீலன் செய்து எப்பொழுதும் போல அபிஷேகங்களும் நித்திய பூஜையும் செய்வதற்கு தகுந்த ஆவணம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும்,

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் மனுவை அனுப்பி இருக்கிறார்கள். ஊர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நித்திய பூஜை முறையாக செய்வதற்கு அரசு அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *