பொள்ளாச்சி அருகே முயல்களை வேட்டையாடியவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கள இயக்குனர். ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவ தேஜா, இவர்களின் அறிவுரையின்படி பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில், கோவை வனப் பாதுகாப்பு படையினரும் பொள்ளாச்சி வனச்சரக பணியாளர்களும் பொள்ளாச்சி தாலுகா கள்ளிப்பட்டி, கணக்கன்பட்டி பகுதியில் சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது சிலர் முயல்களை வேட்டையாடுவது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில்,அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு, நாகராஜ், சதீஷ்குமார், பிரகாஷ், ஈஸ்வரன், பசுபதி, நாகார்ஜுனா, முருகன், சக்திவேல், தங்கவேல் ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் முயல்களை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 இன் படி குற்றவாளிகளுக்கு தலா ரூபாய் பத்தாயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது போன்ற செயல்களில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *