கோவை

வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

இளநீர், தர்பூசணி, மோர், சர்பத், திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பல வகைகள் நீர்மோர் பந்தலை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் துவக்கி வைத்தார்

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் தாக்கத்தை தீர்க்க நீர்மோர் பந்தல்களை திமுக திறக்க வேண்டும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், அணி அமைப்பாளர் வர்த்தக அணி அமைப்பாளர் போனஸ் பாபு ஏற்பாட்டில் , சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நீர் மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் திறந்து வைத்து அனைவருக்கும் வழங்கினார்.

இதில், இளநீர், நொங்கு, மோர், தர்பூசணி, முலாம்பழம், திராட்சி, சர்பத், ஜூஸ் உள்ளிட்ட குளிர்சாதன பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். வெயிலின் தாக்கத்தை தீர்க்க பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கூறுகையில்;-

கடுமையான வெயிலை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க கழக தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த உத்திரவின் அடிப்படையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இதில், நீர்மோர் மட்டும் இன்றி, பழ வகைகளும், குளிர்பானங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, இதேபோல், ஆண்டுதோறும் கோடை காலத்தில் நீர்மோர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அவைத்தலைவரும், நாடாளுமன்ற கோவை தொகுதி திமுக வேட்பாளருமான கணபதி பா.ராஜ்குமார், பொருளாளர் S.M.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், கழக தீர்மானக்குழு இணைச்செயலாளர் நாச்சி முத்து , கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், வழக்கறிஞர் மாநில இணைச்செயலாளர் அருள்மொழி, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை,பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, புதூர் மணிகண்டன், பகுதிக்கழக செயலாளர்கள் நாகராஜ், அஞ்சுகம் பழனியப்பன், கே.எம்.ரவி, கிருஷ்ணராஜ், வி.ஐ.பதுருதீன்,எ ஸ்.எம்.சாமி, செந்தமிழ்செல்வன் வட்டக்கழக செயலாளர்கள் டவுன் பா.ஆனந்தன், அன்பு, ஆனந்தன், சிவக்குமரன்,
அணிகளின் அமைப்பாளர்கள் வடவள்ளி மணி, நா.பாபு, கண்ணன், அன்புச்செழியன், அர்ஜுன், அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, அறங்காவல் குழு உறுப்பினர் சு தனபால். வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *