தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா

தென்காசி,

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், மே தினத்தை முன்னிட்டு தென்காசி விடிஎஸ்ஆர் மஹால் அருகில் துப்பரவு தொழிலாளர்களுக்கு உடை, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு, மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தென்காசி
சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் எம்.முகமது அலி தலைமை தாங்கினார்.
தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர் மீரான், ரஃபீக் அன்சாரி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரபிக் பின் உசேன், சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், உதவி சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தென்காசி ரப்பானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் சம்சுதீன் உலவி கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.
தென்காசி தூய மிக்கேல் ஆதித் தூதர் திருத்தல பாதிரியார் போஸ்கோ குணசீலன், தென்காசி
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோசியர், நகர்மன்ற உறுப்பினர் ராசப்பா,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சிதென் மண்டலத் துணைச் செயலாளர் ஏ.எம்.சித்திக் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது, வர்த்தக அணி மாவட்ட தலைவர் அஹமது மீரான், தமுமுக வாப்பா சேட், திமுக நகர பொருளாளர் அ.சேக் பரித், அசாருதீன், மைதீன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சீருடைகள், மரக்கன்றுகள், நீர்மோர் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *