கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் – சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம்,கீ ழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி அருகே உள்ள. கீழப்புலியூர் அருள்மிகு தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கீழப்புலியூர் அருள்மிகு தம்பிராட்டி அம்மன் திருக்கோவில் எல்லையை வரையறுக்க எல்லைப்புற காளியாக அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து இங்கு வந்து எழுந்தருளியவள் என்பது வரலாறு. குலசேகர பாண்டியனும் அவரின் வழிவந்த பல பாண்டிய மன்னர்களும் இந்த பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.அவர்கள் காலத்தில் கட்டப்பட்டதே இந்த அருள்தரும் தம்பிராட்டி அம்மன் திருக்கோவில் ஆகும்.

தென்காசி அருகே கீழப்புலியூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டு பாட்டின் கீழ் இயங்கும் தம்பிராட்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி தீபாராதனைகள், சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா நடைபெற்றது.

அதன்படி ஒன்றாம் திருநாள் நிகழ்ச்சியை கிழப்புலியூர் பெ.உச்சிமாகாளி தேவர் மற்றும் உபயதாரர்கள் சார்பிலும், 2 ம் திருநாள் நிகழ்ச்சியை அந்தனர் சமூகம் சார்பிலும், 3 ம் திருநாள் நிகழ்ச்சி சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், 4 ம் திருநாள் நிகழ்ச்சிகளை தேவர் சமுதாயம் சார்பிலும், 5 ம் திருநாள் நிகழ்ச்சியை கோகுல யாதவர் சமுதாயம் சார்பிலும், 6 ம் திருநாள் நிகழ்ச்சிகள் ஐந்தொழில் விஸ்வகர்ம சமுதாயம் சார்பிலும், 7 ம் திருநாள் நிகழ்ச்சிகள் வன்னியர் சமுதாயம் சார்பிலும், 8 ம் திருநாள் நிகழ்ச்சிகள் தம்பிராட்டி அம்மன் கோவில் திருக்கோவில் நிர்வாகம் சார்பிலும் நடைபெற்றது.

8 ம் திருநாளான ஏப்.30ம் தேதி காலை திருவோலக்க மண்டபத்தில் மொட்டை போடுதல் , மாவிளக்கு நேர்த்திக்கடன் நிகழ்ச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உருவம் எடுத்தல், ஆயிரம் கண்பானை எடுத்தல், இரவில்கங்கை நீர் எடுத்து வருதல், ஆசார படைப்பு, முழுக்காப்பு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து வாணவேடிக்கைகள் நடைபெற்றது.

1ம் தேதி காலையில் ஊர்சாவடியில் ஆசார படைப்பு. உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன்பு மது பொங்குதல், தம்பிராட்டி அம்மன் கோயில் முன்பு மது பொங்குதல், தீப ராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் நிலையம் வந்தடைந்ததும் தொடர்ந்து தேர் அன்னதான குழுவினர் சார்பில் 35ம் ஆண்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தென்காசி இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் இரா முருகன், உதவி ஆணையர் கவிதா, தக்கார் தங்கம், மற்றும் கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் கட்டளைதாரர்கள் மற்றும் விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *