தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு 2026ஆம் நடைபெற உள்ளதை முன்னிட்டு,காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் மற்றும் பாபநாசம் சட்டமன்ற தொகுதிகளின் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு வட்டாரத் தலைவரும் கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான முனைவர என்.மணிகண்டன் அவர்கள் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி ஆர் லோகநாதன் அவர்களிடம் விருப்பமனு வழங்கினார்.