தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி,
இரண்டாவது நாளில் ஐந்து டன் துணி கழிவுகள் அகற்றம். துணிகளை ஆற்றில் போட்டு நீரை பாலாக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தரை தளத்தை தொடும் முதல் பகுதியில் பாபநாசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பாபநாசர் கோயில் உள்ளது.

கோயில் வருவார் பரிகாரம் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி ஆடைகளை களைந்து தண்ணீரில் விட்டு செல்கின்றனர் .இதற்காக ஆற்றின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தொட்டியில் போடாமல் ஆற்றிலேயே பக்தர்கள் துணியை விட்டு செல்கின்றனர்

இதனால் ஆற்றில் கழிவு துணிகள் தேங்கி தண்ணீர் செல்வதை தடை ஏற்படுகிறது. மேலும் நீச்சல் தெரிந்தவர்கள் கூட ஆற்றின் ஆழம் நிறைந்த பகுதியில் குளிக்கும் பொழுது காலில் துணி சுற்றி இறந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

தற்பொழுது கோடை காலம் என்பதால் பாபநாசம் அணையில் குறைந்து குறைந்த அளவே தண்ணீர் திறப்பு இருப்பதால் ஆற்றை சுத்தம் செய்ய சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் தண்ணீரில் இறங்கி தூர்வாரும் தூய்மை பணியை நேற்று முதல் தொடங்கினர்.

முதற்கட்டமாக பாபநாசம் கோவில் படித்துறை, பாபநாசம் யானை பாலம், எண்ணெய் கசம் பகுதி சிவந்திபுரம் அடைய கருங்குளம் ,விகேபுரம் நகராட்சி, மேல கொட்டாரம் ஆகிய பகுதிக் களிலும், குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த நீரில் புகுந்த துணி கழிவுகளையும் அல்லும் பணியும் மேற்கொள்ளப்பட்டது .

இதில் நான்கு இடங்களில் மொத்தம் ஐந்து டன் துணி கழிவுகள் நீரிலிருந்து அகற்றப்பட்டது .நல்ல நீச்சல் தெரிந்த தூய்மை செய்பவர்கள் மூலம் ஆற்றில் நடு ஆழத்தில் நீண்ட நாட்களாக கிடந்த துணிகளை அகற்றி டிராக்டர் டியூப் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது .

சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி தலைமையில் சமூக அலுவலர்கள் சிங்கம்பட்டி அருணாசலம் மற்றும் பலர் இப்பணிகளை முன்னின்று செய்தனர். இப்பணியானது 6 நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed