கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் 70- வது வார்டு க்குட்பட்ட புரூக்ஃபீல்ஸ் சாலையில் அமைந்துள்ள சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில், மாநகராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.149.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அபிவிருத்தி பணிகள் மற்றும் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
உடன் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், நகர் நல அலுவலர் மரு.மோகன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பொது சுகாதாரக்குழு தலைவர் திரு .பெ.மாரிசெல்வன், உதவி ஆணையர் செல்வி.நித்யா, உதவி செயற்பொறியாளர் திரு.குமரேசன், மாமன்ற உறுப்பினர் திருமதி.சர்மிளா சுரேஷ்நாராயணன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன், ரோட்டரி கோயம்புத்தூர் IKON TRUST, TANKER பவுண்டேஷன் அமைப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.