திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 75 வயது அடைந்தவர்களை கெளரவிக்கப்பட்டு பி எம் டி பரிசோதனை இலவசமாக அளிக்கப்பட்டது. பின்னர் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.முகேஷ் மோகன் முதியவர்கள் மற்றும் மூட்டு வலி உடையவர்கள் வலி வந்தால் உடனடியாக மூட்டு அறுவை சிகிச்சை உடனடியாக செய்யக்கூடாது, வலிக்கான காரணத்தை தெரிந்து முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என செயல்முறை விளக்கத்துடன் விளக்கினார்.
இதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மோகன்ராஜ் கூறுகையில் மூட்டுவலி, இடுப்பு வலி மருந்துகளை அதிகமாக உபயோகப்படுத்துவதினால் டெல்டா மாவட்டத்தில் அதிக அளவில் கிட்னி பிரச்சனை உருவாகியுள்ளது. சர்க்கரை நோயால் கிட்னி,கண் குறைபாடு, பாதத்தில் உணர்வு இன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு ஆண்டுதோறும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முறையாக உடலை பராமரிக்காவிட்டால் சர்க்கரை நோய் பாதிப்பினால் பாதத்தில் புண் ஏற்பட்டு 25 சதவிகிதத்தினர் உயிர் இழந்து விடுகின்றனர். டிடி ஊசி போடுவதால் புண் சரி ஆகிவிடும் என்பது தவறான கருத்தாகும் என்று முதியவர்கள் தங்கள் உடலை பாதுகாப்பது குறித்து விளக்கினார்.