தேனி அருகே பழனி செட்டி பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி

தேனி அருகே பழனி செட்டி பட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு பொது மருத்துவம் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் இ.சி.ஜி எக்கோ போன்ற உயிர் காக்கும் பல் வேறு மருத்துவ உதவிகள் பெற்று பயனடைந்தனர்.

முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் பழனி செட்டி பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ் அய்யனார் முருகன் துணைத் தலைவர் மணிமாறன் இளநிலை உதவியாளர் ஜெயகுமார் உள்பட மருத்துவ துறை அதிகாரிகள் டாக்டர்கள் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *