திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம், மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் ஒன்றிய பகுதியில் திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான, முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ், சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி, தஞ்சை ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தினார். இம்முகாமில் ரத்த பரிசோதனை, இசிஜி, எஃகோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. தலைசிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
குடவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா சுப்பிரமணியன், டாக்டர் இனியன், டாக்டர் இன்பன், திருவாரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் கலியபெருமாள், குடவாசல் நகர செயலாளர் சுவாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் செருகுடி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், குடவாசல் வர்த்தக சங்க தலைவர் அரசன்கோவன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் எம்ஜிஆர்.கருப்பையன், இளைஞர் பாசறை பாப்பா போத்தன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் சங்கர், துணைத் தலைவர் ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புதுக்குடி கண்ணன், பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் ஜி.டி.சிவசங்கரன் உள்ளிட்ட அதிமுக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.