வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி

புதுச்சேரி
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் பத்திரிகை நிருபர்களிடம் கூறியதாவது

அடுத்த 25 ஆண்டுகளுக்கு அடித்தளத்தை உருவாக்கி உள்ள தொலைநோக்கு திட்டம் கொண்ட பட்ஜெட் என்று தெரிவித்தார்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக
ஏழு அம்சங்களை கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு
மைக்ரோ பொருளாதாரம்,
இந்தியாவின் கடைசி குடிமக்களுக்கு வளர்ச்சியை உறுதிப்படுத்துவது,
திறன் கட்டமைப்பு,
திறமையான இளைஞர்கள் உருவாக்குதல்,
சிறு விவசாயிகள் நலன், மற்றும் சிறு தானியங்கள் பயன் படுத்துதல்
இளைஞர் சக்தி பயன்படுத்தி கொள்வது போன்ற அம்சங்களைக் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எதிர் வரும் காலங்களுக்கு அடித்தளத்தை இந்த பட்ஜெட் உருவாக்கி உள்ளது என்று கூறிய மாநிலத் தலைவர் கொரோனா நோய் தொற்று, உக்கரைன் போர், மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மீறி அனைவருக்கும் பலன் அளிக்கக்கூடிய சிறப்பாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஜாமின் இல்லாமல் இளைஞர்கள் தொழில் செய்ய இந்த வழி வகுத்துள்ளது.என்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்கட்டமைப்பு சாலை மேம்பாடு திட்டம், உணவு விநியோக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
2014 முதல் பிரதமர் பதவியேற்றதில் இருந்து தனிநபர் வருமானம் 2 லட்சம் ஆக உயர்ந்துள்ளது என்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது என்பதை பெருமையாக உள்ளது . புதுச்சேரி மாநிலம் முழுவதும் பட்ஜெட் விளக்க கூட்டங்கள் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்,
பேட்டியின் போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் , குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார் , பாஜக மாநில பொது செயலாளர் மோகன் குமார் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன் ரவிச்சந்திரன் முருகன் பாஜக மாநில தொழில் துறை பிரிவு அமைப்பாளர் ராஜகணபதி முன்னாள் நீதிபதி த அருள் பாஜக ஊடகப்பிரிவு மாநில அமைப்பாளர் குருசங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *