மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்.!!!.

        
புதுச்சேரியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் திரு .S . மாஸ்கோ அவர்கள் RLV பேரவையில் இணையும் விழா மாநில அமைப்பாளர் சிவகுமரன் தலைமையில் அட்மின் கோமதி முன்னிலையில் RLV பேரவை நிறுவன தலைவர் R.L. வெங்கட்டராமன் இல்லத்தில் நடைபெற்றது.

சுமைதாங்கி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் S. மாஸ்கோ அவர்கள் RLV ஜனநாயக பேரவையின்
நிறுவனத்தலைவர் R.L. வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து , தான் கடந்த 10 ஆண்டுகளாக வில்லியனூர் தொகுதியில் சுமை தாங்கி அறக்கட்டளை என்கிற டிரஸ்ட் நடத்தி வருகிறேன் என்றும்,. அதன் நிறுவனத் தலைவராகவும் இருந்து வருகிறேன்.

அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளேன் என்றும், கொரோனா காலத்தில் கூட என்னால் முடிந்தவரை எனது சுமைதாங்கி அறக்கட்டளை மூலம் உத்தரவானி பேட் பகுதியில் வசிக்கும் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் உணவு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொடுத்து உதவி செய்து வந்துள்ளேன் என்றும், மக்களவை தேர்தல் முடிந்தும் கூட இரண்டு நாட்களுக்கு முன்பாக கோடை காலத்தில் வெப்பம் தாக்கத்தினால் வெளியில் செல்ல முடியாமல் இருக்கும் கூலி வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கினேன் என்றும் , மக்களவை தேர்தல் நேரத்தில் வாக்குக்கு 500 மற்றும் 200 என்று பணம் கொடுத்த வேட்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்று வில்லியனூர் முருங்கபாக்கம் கூட்ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தி வாக்காளர்களுக்கு பணம் பொருள் கொடுப்பதை தேர்தல் துறை தடுக்க வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய என்னை காவல் துறை கைது செய்தது என்றும் அனைத்து விபரங்களையும் RLV ஜனநாயக பேரவையின் நிறுவனத்தலைவர் ஆகிய என்னிடத்தில் எடுத்துக்கூறினார்.

மேலும் சமூகப்பணியை மேலும் விரிவு படுத்துகின்ற வகையில் RLV பேரவையில் இணைந்து செயல் பட விருப்பம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தனது சுமைதாங்கி அறக்கட்டளையை முழுமையாக கலைத்து விட்டு தனது நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவருடனும் திரளாக வந்து RLV பேரவையில் இணைத்துக்கொண்டார்.

S . மாஸ்கோ அவர்களையும், அவருடன் வந்த வில்லியனூர் மகளிர் அணி தலைவி எம். பரமேஸ்வரி மற்றும் தொகுதி , அறக்கட்டளை நிர்வாகிகள் , பெரியபேட் ஊர் பொதுமக்கள் முத்துசாமி , திருநாவுக்கரசு, எழிலரசி, சங்கரி, அலமேலு மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணி தலைவி நிர்வாகிகளையும், அந்த ஊர் மக்கள் அனைவரையும் RLV அவர்கள் வரவேற்றார். அனைவரும் மகிழ்ச்சியாக RLV பேரவையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *