புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலைமைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்கள் கிரீன் வாரியர் நிறுவன நிர்வாகத்தை நேரில் அழைத்து கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதை கண்டித்து, தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு பணிகள் சரியாக நடைபெற வேண்டும் என்றும், இனிமேலும் இதுபோன்ற அலட்சியம் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “அனைத்து குப்பைகளையும் சேகரித்து முதல்வர் இல்லத்தின் முன்பு கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். அதேபோல், உப்பளம் தொகுதியில் இருந்து குப்பைகளை வண்டி வண்டியாக சேகரித்து அனைத்து அரசு அலுவலகங்களின் வாசல்களில் கொட்டுவேன்” எனவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, கிரீன் வாரியர் நிறுவனத்தின் நிறுவனர், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றும், குப்பை அகற்றும் பணிகள் முறையாகவும் காலதாமதமின்றியும் நடைபெறும் என்றும் உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்களுக்கு உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின்போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் நிசார், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ், கழக சகோதரர்கள் ராஜி, செந்தில், ரகுமான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *