கோவையில் செயல் பட்டு வரும் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்திய அளவில் முன்னனி நிறுவனங்களாக 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்றது..

இந்நிலையில் பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளை, தனது 100-வது நிறுவன தின விழாவை ஒட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றனர்..

இதன் ஒரு பகுதியாக நீலாம்பூர் பகுதியில் உள்ள பிஎஸ்ஜி கன்வென்ஷன் சென்டரில் 100 வது நிறுவன தினம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது…

நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் பத்மநாபன் கலந்து கொண்டு பேசினார்…

தேசிய கீதத்தை முதலில் பாடிய பள்ளி என்ற பெருமையை பெற்ற சர்வஜனா பள்ளியில் தொடங்கி இன்று 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களாகப் பிஎஸ்ஜி வளர்ந்திருப்பதாக பாராட்டினார்..

சர்வஜனா என்பது ‘அனைவருக்குமான பள்ளி’ என்ற நோக்கில் 100 ஆண்டுகள் சமூக நீதியை நிலைநாட்டி செயல்பட்டு வருவதை அவர் சுட்டி காட்டினார்..

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி துறையில் கூடுதலாக பிஎஸ்ஜி லீப் அகாடமி மற்றும் பிஎஸ்ஜி வேர்ல்டு ஸ்கூல் எனும் புதிய கல்வி முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டது..

நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நான்கு ஆளுமைகளுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன:

இதில் பிஎஸ்ஜி விஸ்வ சேவா ரத்னா விருதை டாக்டர் ஆர். வி. ரமணி மற்றும் தமிழக முன்னாள் டாக்டர் இராதாகிருஷ்ணன்,ஆகியோருக்கும்,பிஎஸ்ஜி விஸ்வ ஞான ரத்னா விருதை ஆராய்ச்சியாளர் நவகந்த பட் மற்றும் கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது….

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *