ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை
இருக்கும் உடல்நலத்தை சீர்குலைக்காமல் வாழ்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆறு வயது முதல் 60 வயது வரையிலான 250 யோகா மாணவர்கள் ஒன்றிணைந்து 47 நிமிடங்களில் 55 முறை சூர்ய நமஸ்காரம் செய்து சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இவர்களின் முயற்சியைக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், கோவை மாவட்டச் செயலாளர் திலகவதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெருமாள் நீலமேகம், செயற்குழு உறுப்பினர் நீலன் மற்றும் லலிதா போன்றோர் மாணவர்களின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தனர்.
மேலும், அக்சரா என்ற மாணவி யோக நித்ராசனா நிலையில் தனது உடலை 35 நிமிடங்கள் சமநிலையில் வைத்திருந்த அதேவேளை ஜோசிகா என்ற மாணவி ஏக பாத ராஜகபோடாசன நிலையில் தனது உடலை 17 நிமிடங்கள் சமநிலையில் வைத்திருந்தார். இவர்களது முயற்சிகளும் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
நிகழ்வை நானா யோகா ஸ்டுடியோ நிறுவனர் திரு.ஜெயராமன் ஒருங்கிணைத்து நடத்தினார் ஓசோன் யோகா பயிற்சி நிறுவனத்தின் மூத்த யோகா ஆசான் பாலகிருஷ்ணன் யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.