விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில் நடைமேடையில் பயணிகள் வசதிக்காக நின்றதை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய பாஜகவினர்
திருவெற்றியூர் விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் இன்று முதல் நின்று செல்லும்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரயில்வே துறை மத்திய அமைச்சருக்கு கடிதம் வழங்கிய நிலையில் தற்போது விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் நின்ற நிலையில் பாஜக சார்பில் கொடியுடன் பெட்டர குண்டா ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்றதை வரவேற்று பாஜகவினர் பட்டாசு வெடித்தும் ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்
மத்திய அமைச்சர் எல் முருகன் ரயில்வே அமைச்சருக்கு கடித வழங்கிய நிலையில் தற்போது விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் புறநகர் ரயில் நிலையத்திற்கும் சுமார் 200 மீட்டர் தூரமே உள்ள நிலையில் மெட்ரோவில் பயணம் செய்வதற்கு இந்த வசதியாக இருக்கும் என தெரிவித்தனர் பாரதப் பிரதமருக்கும் ரயில்வே துறை அமைச்சருக்கும் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த னர்