தேனி அருகே பழனி செட்டி பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய திருநாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தையொட்டி பேரூராட்சி செயல் அலுவலர் இரா.சுதா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து நம் இந்திய திருநாட்டின் தேச பிதா மகாத்மா காந்தி திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து விழாவில் பங்கேற்ற பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வி.பி.ஏ.மிதுன்சக்ரவர்த்தி துணைத் தலைவர் மணிமாறன் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயகுமார் அலுவலக உதவியாளர் முரளி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்