செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பக்கத்தில் தை கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா ஆறுமுகப்பெருமான் 60 ஆம் ஆண்டு தை கிருத்திகை உற்சவம் முன்னிட்டு
108 பால்குடம் எடுத்தல் நிகழ்வு விமர்சையாக நடந்தது.
விழா முன்னதாக சங்கு தீர்த்த குளம் அருகே உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து, விரதம் இருந்த பக்தர்கள் மேல தாளங்களுடன் 108 பால்குடங்கள் சுமந்து, மாட வீதி வழியாக வலம் வந்து, ஆட்சிஸ்வரர் கோவிலில் உட்பிரகாரத்தில் உள்ள
ஸ்ரீ வள்ளி தேவசேனா ஆறுமுகப்பெருமான் ஆலயத்திற்கு வந்தடைந்தனர்.
ஆறுமுக பெருமானுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் குடத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஜி.ஆர்.ஜுவல்லரி வணிக வைசியர் ஜி.ராமலிங்க செட்டியார் குடுப்பத்தினர் செய்திருந்தனர் இவ்விழாவில் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர்கள் ராஜலட்சுமி, வி.ரத்தினவேலு,க.கபாலி, து.மணிகண்டன்,
ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.