தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 5-ஆடுகள் உயிரிழப்பு-15-ஆடுகள் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ரெட்டாரவலசு பனங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த மகுடபதி தனது தோட்டத்தில் 35-செம்மரி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று மாலை வழக்கம்போல் செம்மறியாடுகளை பட்டியில் அடைத்து விட்டு அருகே உள்ள தனது வீட்டிற்கு சென்று உள்ளார்-நள்ளிரவு 1- மணி அளவில் செம்மறி ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது தெரு நாய்கள் செம்மறியாடுகளை கடித்துக் குதறியபடி இருந்துள்ளது.
செம்மறியாடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டிக்கு அருகே சென்றபோது
4- வெறி நாய்கள் செம்மறியாடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டிக்குள் இருந்து தப்பிச்சென்றதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
நாய்கள் கடித்ததில் 2-செம்மறி ஆடுகள் 3-செம்மறி ஆட்டுக்குட்டிகள் மொத்தம் 5- செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளது மேலும் 15-செம்மறி ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறது….
சம்பவம் பற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் மற்றும் கொளத்துப்பாளையம் கால்நடை மருத்துவர் தேவி சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த செம்மறி ஆடுகளை உடல் கூர் ஆய்வு செய்து வருகிறார் மேலும் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் அரிச்சந்திரன் என்பவரின் தோட்டத்தில் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் 20-செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்க.