கரூர் செய்தியாளர் மரியான் பாபு
வன்னியர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்
கரூரில் வன்னியர் மக்கள் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக கூட்டம் கரூரை அடுத்துள்ள அரங்கநாதன் பேட்டை சந்திப்பன் கோவிலில்நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் சக்தி படையாட்சியார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில வரும் தேர்தல் நிலைப்பாடு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்க்கு கரூர் மாவட்ட செயலாளர் சிதம்பரம் கண்டர் வரவேற்புறையாற்றினார்.கருர் மாவட்ட. அமைப்பாளர் தர்மன், இளைஞர் அணி
தலைவர் ரவி,மாவட்ட துணை செயலர் மதிவாணன்,விஜயகுமார்,மாணவரனி நந்தகுமார்,ஒன்றிய தலைவர் பிரபு, மகளிரணி தலைவி சூடாமணி,செல்வி, விவசாய அணி செயலர் பாலு,தொண்டர்அணி மோகன் மற்றும் பொறுப்பாளர்கள்,கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கலந்து கொண்டனர்.