மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கருப்பு டன் 1 க்கு 4000 வழங்கிட கோரியும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்த படி சர்க்கரை ஆலை உடனடியாக திறக்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் கரும்புகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட நிர்வாகி முத்துராமன் ஆகியோர் பேசினர். நிறைவு செய்து வைத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வேல்மாறன் பேசினார்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க, நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பெண்கள் என ஏராளமனோர் கையில் கரும்பு களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.