குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்” தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றார்.. இவரை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி வருகை தந்தார்…
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்சனை அவர்களுடைய உட்கட்சி பிரச்சனை. அதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது..
தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக அமைந்து இருக்கிறது. பல கட்சிகள் இன்னும் வந்து சேரும். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி தினசரி பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால் பெண்கள் கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இதற்குக் காரணம் கஞ்சா போதைப் பொருட்கள், மெத்தபெட்டமைன் போன்றவை தான். இந்தியாவில் அதிகமாக தற்கொலை செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. எந்த குற்றமும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக முதலமைச்சர் கூறினார். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று கூறினார். ஆனால் தினசரி கொலை, கொள்ளை நடந்து கொண்டே இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் தனியாக வீட்டில் யாரும் இருக்க முடியாது.
10 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு கொடுத்து இருக்கிறது. பிள்ளை, வெள்ளாளர், இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று திமுக அரசு வழக்கு போட்டிருக்கிறது. மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அதனை எதிர்த்து மாநில அரசு நீதிமன்றம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள். குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சியை மக்கள் புரிந்து இருக்கின்றார்கள்.. தேர்தல் வர இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்..
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? கனிமொழி ராகுல் காந்தியை சந்திப்பதற்காக டெல்லி போய் இருப்பதாக கூறுகிறார்கள்.. என்னை பொறுத்தவரை தமிழக காங்கிரஸ் கட்சிகாரர்கள் திமுக கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்குறியில் கட்சிக்காரர்கள் தற்போது உள்ளனர்..
அவர்களுடையை கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.. எங்களுடைய கூட்டணி நெருக்கம் ஏற்பட்டு மிகப்பெரிய மெகா கூட்டணியாக மாறும் என்றார்
பேட்டி : நயினார்,பாஜக மாநில தலைவர்