கொடைக்கானலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்து விட்டு,மதுரை நோக்கி சென்ற கார்,வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே செல்லும் போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 150 அடி கிடுகிடு பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்த கார் விபத்தில், காரில் பயணித்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி, காவல்துறையினர் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலம் என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்வது வழக்கம், இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்ற திருமண சுப நிகழ்ச்சிக்காக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 5 நபர்கள் வேகன் ஆர் காரில்,கொடைக்கானலுக்கு வருகை புரிந்து, சுப நிகழ்ச்சியை முடித்து விட்டு, மதுரை நோக்கி இன்று மாலை வேளையில் சென்றுள்ளனர்,
அப்போது வத்தலக்குண்டு பிரதான சாலையில் பெருமாள்மலை அருகே கார் செல்லும் போது திடீரென பிரேக் பிடிக்காமல்அதிவேகமாக சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கம் உள்ள சுமார் 150 அடி கிடுகிடு பள்ளத்தில் உள்ள தனியார் நிலத்தில் வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் காரில் பயணித்த பாபு(47),உமர்(27) உள்ளிட்ட இருவருக்கு கால் மற்றும் கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளது,
அதே போல மற்ற மூன்று நபர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்,இதனை தொடர்ந்து இந்த சாலையில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகள், மற்றும் அப்பகுதியினர் இணைந்து 150 அடி பள்ளத்தில் காயங்களுடன் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,
இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் மலைச்சாலையில் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் மிதமான வேகத்தில் இயக்கவும் கவனமாக பயணிக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டம் செய்தியாளர் கோடை ரஜினி…