முதுகுளத்தூர் நிருபர் ஆர். செந்தில்குமார்
காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி. சிக்கலில் 100 நாள் வோலை திட்டம் திருத்தத்தை கண்டித்து தெருமுனை பிரச்சார ம். கடலாடி தாலுகா சிக்கல் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் காந்தியின் பெயரில் உள்ள நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றம் செய்ததை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அளவில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைப தலைவர் மாவீரன் வேல்சசாமி, சோபாரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிக்கல் நகர் தலைவர் கனி அனைவரையும் வரவேற்றார். மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில். கடலாடி வடக்கு வட்டார தலைவர் சுரேஷ் காந்தி, முதுகுளத்தூர் வட்டார தலைவர்கள் புவனேஸ்வரன், ராமர், ராமநாதபுரம் காமராஜ் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்