பெரம்பலூர்.ஜன.30 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்ராமராஜன் பேசுகையில் விவசாயிகளிடமிருந்து மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு பராமரிப்புத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
ராஜூ பேசுகையில் கை.களத்தூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விவசாயிகளுக்கு மானியத்தில் மாட்டுக்கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
கண்ணபிரான் பேசுகையில் பெரமசெல்லதுரை அவர்கள் பேசுகையில் பாலிற்கான ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ராஜாசிதம்பரம் அவர்கள் பேசுகையில் மக்காச்சோளத்திற்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வனவிலங்குகளால் சேதமடையும் வேளாண் பயிர்களுக்கு ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
திருநீலகண்டன் அவர்கள் பேசுகையில் கூட்டுறவுத்துறையில் உள்ள டிராக்டர் போன்ற வேளாண் உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் திரு. ராமராஜ், தெரணி அவர்கள் பேசுகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தெரணி பகுதியில் உள்ள ஏரிகளை சீரமைத்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
ஜெயராமன் பேசுகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அதே பெயரில் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி செய்து, சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ரமேஷ் பேசுகையில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெரம்பலூர் நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறையை தடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்ததாவது,பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருவதால், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகள் மூலம் மக்காச்சோள எடை மோசடியை தடுத்திட எடை மேடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குநர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே),திருமதி ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.