ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேன்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC) ,நிர்வாக அலுவலர் V.பாரதி (கணக்கு), நாகராஜன் (நிர்வாகம்), தனிப்பிரிவு ஆய்வாளர் விஜயலஷ்மி, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்-இதே போன்று அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.