ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேன்.
நெரும்புலி ஊராட்சியில் ரு 17 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதை பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் மாறன் :-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சிக்குட்பட்ட நெடும்புலி கிராமத்தில் ஈஸ்வரன் கோயிலுக்கு செல்லும் வழியில் சிமென்ட் ரோடு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து பஞ். நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து பஞ். பொது நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று பஞ். தலைவர் மாறன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ரோடு அமைக்கும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது பஞ். செயலர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.