தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மதுரை தமுக்கம் முதல் காந்தி மியூசியம் வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. மதங்களைக் கடந்த மனித ஒற்றுமை யின் அழகான வெளிப்பாடாக இது அமைந்தது.இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களின் தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, அமைதி, சகோதரத் துவம், சமத்துவம் ஆகிய மதிப்புகளை வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் , தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை விஜயா – மதுரை ஹாஜியார்
அல்ஹாஜ் சபூர் முகைதீன், மதுரை ராமநாதபுரம் திருமண்டல பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்,மதுரை மாவட்டம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பிரதிநிதி
அல் ஹாஜ் லியாகத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.