தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும், திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், சந்தனம். பஞ்சாமிர்தம் தேன், பன்னீர் மற்றும் பல வகை மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று
அதன் பின்அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது.உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது. பல மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் இன்று அன்ன பிரசாதம் தேனி முல்லை நகர்
S. ரமேஷ் குமார் சர்வேயர் முனிஸ்வரி மற்றும் தாமரைகுளம் ஓதுவார் SP . தெய்வேந்திரன் சார்பா வழங்கினார்கள் ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்கள் செய்திருந்தனர் 1/2/26 ஞாயிற்றுகிழமை மாலை பெளர்ணமி கிரிவலமும் சிறப்பான அன்னதானமும் நடைபெறும்.