இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா
கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் நடைபெற்ற சிருஷ்டி கே ரங் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது…
கோவை கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் இயற்கை அறிவியல் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு தலைப்புகளில் ஆண்டு விழா நிகழ்வு நடைபெற்று வருகிறது…
இதன் தொடர்ச்சியாக 2026 ஆம் ஆண்டு சிருஷ்டி கே ரங் எனும் இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும் தலைப்பில் ஆண்டு விழா நடைபெற்றது…
பள்ளியின் தாளாளர் பால புவனேஸ்வரி மற்றும் நிர்வாக அறங்காவலர் பால முகுந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..
அப்போது பேசிய அவர்,கல்வி கற்கும் மாணவர்கள் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் உழவு தொழில் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்,அப்போதுதான் உணவின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்..
முன்னதாக விழாவில் பள்ளியில் சிறந்து செயல்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
தொடர்ந்து இயற்கையின் அவசியத்தையும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவ,மாணவிகள் நடத்தினர்.
இதில் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,பூமி உள்ளிட்ட இயற்கைக்கான வண்ணங்களில் நாடகம், மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
இதில் எல்.கே.ஜி.பயிலும் குழந்தைகள் முதலான சிறுவர் சிறுமிகள் பல்வேறு வண்ண உடையணிந்து நடனம் ஆடினர்..
வண்ண ஆடைகள் அணிந்து மாணவ,மாணவிகள் நடத்திய இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன..
விழாவில் பள்ளியின் முதன்மை கல்வியாளர் ஹேமலதா,பள்ளி முதல்வர் செந்தில் மற்றும் ,ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.