எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையாக முதற்கட்டம் ஐந்து திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று அறிவித்தார். அதோடு அறிவித்த திட்டங்களின் தொகுப்பை பொதுமக்களிடையே தெரியப்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் விநியோகிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பழைய ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைவீதிகள், ஆட்டோ ஸ்டாண்ட், மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், ஆம்னி பஸ் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள கடைகளிலும் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கை பிரச்சார துண்டு பிரசுரமும் விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்-லே சாட்சி என்ற தகவல் தொழில்நுட்ப பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமாண இரா. சுதாகர், பகுதிகழகச் செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், சந்தன பட்டு, சார்பு அணிச் செயலாளர்கள் பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், அருண்ஜெபக்குமார், நிலா சந்திரன்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆண்ட்ருமணி, சுகந்தன் ஆதித்தன், வக்கீல் முனியசாமி, ராஜ்குமார், ராஜகுமார் ஆபிரகாம், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடா மந்திரமூர்த்தி, தூத்துக்குடி மணிகண்டன், ஸ்ரீபாலாஜி முத்துமணி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் நவ்சாத், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன் மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா, ராஜேஸ்வரி, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், பொற்கிழி ஜான்சன் தேவராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சொக்கலிங்கம், நிர்வாகிகள் அலெக்ஸ்.ஜி, பெவின் குமார், ரெங்கன், மனோகர், பெருமாள் ராஜ், தங்க மாரியப்பன், ரமேஷ், பாலாஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.