இந்திய கட்டுமான வலையமைப்பு (CNI) மூலம் தொழில் வல்லுநர்களை இணைக்கவும், வணிக வளர்ச்சியை வளர்க்கவும், தொழில் முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வருடாந்திர மாநாடு, விருது வழங்கும் விழா 2026 நிகழ்வு திருச்சி மொராய்ஸ் கிளாரியன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிஎன்ஐ சங்க வணிக விளக்கக்காட்சிகள், உறுப்பினர் ஸ்பாட்லைட்கள், செயல்திறன் அறிக்கைகள் மற்றும் கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் நவீன நுட்பங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்க்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிஎன்ஐ மண்டல இயக்குனர் பி சந்திரசேகர் வரவேற்றார். நிறுவனர் உதயகுமார் தலைமை வகித்தார். சிஎன்ஐ பவுண்டேஷன் கவிதா முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் பங்கேற்று, தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற, உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா உள்ளிட்டோரை பாராட்டி மரணத்திலும் மரியாதை காத்தவர் விருதினை வழங்கினர். தன்னம்பிக்கை பேச்சாளர் அபு , வழக்கறிஞர் அருண் , விருத்தாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிஎன்ஐ அமைப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.நிறைவாக காசி மகேஸ்வரன் நன்றி கூறினார்.