திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம்.
செங்கல்பட்டு,
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை நிறுவத்தின் சார்பில் 30ம் தேதி திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.டான்சாக்ஸ் திட்ட இயக்குனர் சீதாலக்ஷ்மி அறிவுத்தலின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில், ரியல் அறக்கட்டளை திட்ட இயக்குனர் லாரன்ஸ், மாவட்ட எய்ட்ஸ் திட்ட அலுவலர்கள் பேபி, பரணி, பபிதா ஆகியோர் வழிகாட்டுதலின்படி, மேம்படுத்தப்பட்ட களப்பணிக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
தலைமை கொட்டமேடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கண்ணபிரான், துணை தலைவர் துளசி திருநாவுக்கரசு, ஊராட்சி செயலாளர் பானு, 5வது வார்டு உறுப்பினர் பாபு, திட்ட மேலாளர் மணிகண்டன் செட்டிநாடு மருத்துவமனை மருத்துவர்கள் அஸ்வினி, ஹர்ஷினி,ஆகாஷ், சிவசாய், கேளம்பாக்கம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் பணியாளர்கள் வசந்தி, லலிதா, மொபைல் நம்பிக்கை மையம் கிஷோர், ரியல் அறக்கட்டளை பணியாளர்கள் ரிசா சம்ரீன், நாகலட்சுமி, சித்ரா,மகேஸ்வரி மற்றும் இலக்கு மக்கள், பொது மக்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் கண் சிகிக்சை, தோல் நோய், பொது மருத்துவம், சர்க்கரை நோய், பால்வினை நோய், எச். ஐ. வி, முதலான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆலோசனை வழக்கப்பட்டது.