திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள, அனைத்து ஊடகவியலாளர்கள், பதிவு பெற்ற அனைத்து தினசரி, வார, மாத இதழ் பதிப்புகளும், முறைப்படி பதிவு பெற்ற அனைத்து தொலைக்காட்சி, மின்னனு ஊடகவியலாளர்களும், மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சேவையாக செய்து வரும் பத்திரிக்கைதுறை ஜனநாயகத்தின் நான்காவது தூண் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
பெரிய பத்திரிக்கையாளர்கள், சிறிய பத்திரிக்கையாளர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிக்கையாளர்களையும் பாதுகாப்போடும் அரசு நடத்திட வேண்டும் , அரசு விழாக்களில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மட்டுமே என்ற அனுமதியை தவிர்த்து RNI பதிவு செய்த செய்தி நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்கிய அடையாள அட்டை வைத்துள்ள செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும்
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான அங்கீகாரம் கிடைக்காததினால், அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றது. அரசு அங்கீகார அட்டை பெற்றவர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் எந்த ஒரு பாகுபாடுமின்றி அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றிட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்
வளர்ந்து வரும் ஆன்லைன் மின்னனு ஊடகவியலாளர்களையும் அரசு அங்கீகரிக்கப்பட வேண்டும். இதே போல தாலூகா வாரியாக பணியாற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், மாவட்ட செய்திதுறை அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.
பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களின் நலன்களை பாதுகாக்க பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் காலதாமதமின்றி சட்டப்பூர்வமாக உறுதி செய்திட வேண்டும்
அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கி, பாகுபாடு இன்றி சலுகைகள் வழங்கிட வேண்டும், அனைத்து சுங்கச் சாவடிகளிலும், கட்டணத்தில் தளர்வு செய்திட வேண்டும்,பேருந்துகள் மற்றும் இரயில்களில் கட்டண சலுகை வழங்கிட வேண்டும். நலிவுற்ற அனைத்து பத்திரிக்கையாளர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, திருமண, மகப்பேரு உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகை
குழந்தைகளின் கல்வி வேலைவாய்ப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடு சலுகைகளும் வழங்கிட வேண்டும்
சம்பள இல்லாத அனைத்து நலிவுற்ற பத்திரிக்கையாளர்களுக்கும், அடுக்குமாடி வீடுகளையும், அல்லது இலவச வீடுகளையும், கொடுத்திட வேண்டுமெனவும், அரசு இலவச மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
அரசுக்கு எதிராக, பொதுமக்களுக்கு பாதிப்படையவைக்கும் அனைத்து முறைகேடுகளையும், நிருபர்கள் தெரிவித்தனர் பத்திரிக்கை வாயிலாக செய்திகள் சேகரிக்கச் செல்லும் சமயம் பத்திரிக்கை ஊடகவியலாளர்களுக்கு, அரசுக்கு எதிராக முறைகேடுகள் செய்வோர்கள் மூலம் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலையில், அரசு தனி கவனம் செலுத்தி இதற்கென ஒரு தனிச்சட்டத்தை இயற்றி நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென
தாராபுரம் தொகுதி விடுதலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியிடம் நா. தமிழ் முத்து தலைமை மேனாள் மாவட்ட செயலாளர் மனு அளித்தனர்
இந்நிகழ்வில் தாராபுரம் நகர செயலாளர் க. செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் வ. ஆற்றலரசு, மாநில துணைச் செயலாளர் பி.முத்தமிழ்வேந்தன்,குண்டடம் ஒன்றிய செயலாளர் சிரஞ்சீவி, நகரபொருளாளர் தெ.கரிகாலன், நகர அமைப்பாளர் செ. திருநாவுக்கரசு, ஒன்றிய அமைப்பாளர் சு. ஸ்டேன்லி, நகர பொறுப்பாளர் நா.சுப்ரமணியன் மற்றும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நா. சக்திவேல். ஆகியோர் கலந்து கொண்டனர்