தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இணைந்து பொது விருந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, மக்களுடன் மக்களாக அமர்ந்து உணவருந்தினர். வடை பாயசத்துடன் கூடிய இந்த பொது விருந்து நிகழ்ச்சியில் 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அறுசுவை உணவருந்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா, நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர் மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.