தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் தைப்பூச விழா நடைபெற்றது. குரு வழிபாட்டை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கிவைத்தார்.

விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், தொற்று நோய் மற்றும் விபத்துக்களில் இருந்து மக்களை காக்கவும் வேண்டி பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அபிஷேக நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணநீலா சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்தார். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சக்தி பீட செயலாளர் கணேஷ் தொடங்கி வைத்தார்.

விழாவில், ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மாரியப்பன், சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, இளைஞர் அணி மணி, கோவில்பட்டி மன்ற பொறுப்பாளர்கள் கற்பகவள்ளி, ராதா, சக்திபீட மகளிர் அணி அகிலா, செல்வி, புவனேஸ்வரி, முத்துலெட்சுமி, புதிய துறைமுகம் மன்ற தலைவி கண்ணகி உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *