தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு உள்வட்டத்திற்குட்பட்ட வேங்கிபாளையத்தில், அஇஅதிமுக மற்றும் பாஜக இணைந்த பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ், இணைச் செயலாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக சார்பில் குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம் மற்றும் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் உலகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அதிமுக மற்றும் பாஜக சார்பாக 150-க்கும் மேற்பட்ட பூத் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, வரும் தேர்தலை முன்னிட்டு பூத் வாரியான பணிகள், வாக்காளர் அணுகுமுறை மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சின்னமணி (எ) P.மோகன்ராஜ்
மாவட்ட கவுன்சிலர் T.சிவபாலன் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் K.V சோமசுந்தரம் அவர்கள் குண்டடம் ஒன்றிய குழு தலைவர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் K.C குப்புசாமி அவர்கள் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் V.C ஹரிஹரமூர்த்தி அவர்கள் எம்ஜிஆர் மன்ற ஒன்றிய தலைவர் வேங்கை R. மதன் அவர்கள்
தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் K.R பொன்சிவரஞ்சன் அவர்கள்
பாஜக குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் S. வெங்கடாசலம்
பாஜக குண்டடம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் V. மகேஸ்வரன்.
திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் K.G உலகநாதன். என பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *