சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடுவுடைய கோவில் அருகே வடக்கு நோக்கி அமர்ந்துள்ள குரு தட்சிணாமூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவில் உதவி ஆணையர் நற்சோனை மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் திமு தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அனைத்து கோவில்களிலும் தெற்கு முகமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி திருவொற்றியூரில் வடக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு பெற்றது
வடிவுடைய அம்மனுக்கு ஞான உபதேசம் செய்யும் வடக்கு நோக்கி வடகுரு ஸ்தலமாக அமையப்பெற்ற திருக்கோவிலில் யோக தட்சிணாமூர்த்தியாக 10 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமாக மூலவர் அருள் பாலித்து வருகிறார்
ஆதிசங்கரர் வழிபட்ட தக்ஷிணாமூர்த்தி கோவிலில் கடந்த 2010 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை அடுத்து 15 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது
கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கடந்த புதன்கிழமை விநாயகர் பூஜையுடன் தொடங்கப்பட்ட யாகசாலை பூஜைகள் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் நிறைவு பெற்று தீபாரதனை நடைபெற்றது.
நாதஸ்வரம் மேளம் தாளம் முழங்க புண்ணிய நதிகளில் கொண்டுவரப்பட்ட நீரை சிறப்பு பூஜைகள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் இதேபோன்று அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னியம்மன் ஆலயத்தில் யாக சலை பூஜைகள் நிறைவு பெற்று சிவாச்சாரியார்கள் தலையில் கலசங்களை சுமந்து ஊர்வலம் சென்று
பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர் இதனை அடுத்து அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
திருவொற்றியூரில் ஒரே நேரத்தில் இரண்டு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது