கம்பம் நகரில் நேதாஜி அறக்கட்டளை 26 வது ஆண்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல் பட்டு வரும் மிகச் சிறந்த தொண்டு நிறுவனமான நேதாஜி அறக்கட்டளையின் 26வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவிற்கு பெஸ்ட் மணி கோல்டு அதிபர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார்

தேனி மாவட்ட மக்கள் மன்ற நீதிபதி ஏ கே கே ரஜினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த சாதனையாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேதாஜி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சோ பஞ்சு ராஜா எழுதிய கம்பம் வரலாறு என்ற நூலை டாக்டர் சையது சுல்தான் இப்ராஹிம் வெளியிட அதனை ஜெஎஸ்டி மஹால் அதிபர் ஜெ.எஸ்.டி. அன்பழகன் பெற்றுக் கொண்டார். விழா இறுதியில் ஆசிரியர் சுருளிப்பட்டி சிவாஜி நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *