மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள் வேண்டுகோளை ஏற்று, நெல்லை எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ரயில்வே அமைச்சரை சந்தித்தார். மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சி.எஸ்.டி. நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும்; எல்.டி.டி.க்கு மாற்றக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், தற்போது சி.எஸ்.டி.யில் நடைபெறும் பணிகள் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவடையும்; அதன் பின்னர் மாற்றி தந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அதிமுக, திமுக, வி.சி.க எம்.பி.க்களுக்கும், மும்பை பிஜேபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடமும் வேண்டுகோள் வைத்துள்ளோம். தற்போது நெல்லை எம்.பி. திரு. ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ரயில்வே அமைச்சரை சந்தித்துள்ளார். மற்றவர்கள் சந்தித்த தகவல் கிடைத்தவுடன் பகிர்கிறேன். #MumbaiNagercoilExpress #CSMT #PublicIssue தகவலுக்காக. மும்பை விழித்தெழு இயக்கம் & மும்பை தமிழர்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *