தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்களின் ஒரு அங்கமான தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதை தரமாக உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் அவர்களுக்கு உணவு பரிமாறி மகத்தான மக்கள் சேவையை பேரூராட்சி மன்ற தலைவர் ஒ.ஏ.முருகன் செய்து தூய்மை பணியாளர்களுடன் எளிமையாக அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.உடன் பேரூராட்சி செயல் அலுவலர் இளநிலை உதவியாளர் சின்னச்சாமி உள்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்