எல்லாபுரம் கிழக்கு-மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கன்னிகைப்பேர், பெரியபாளையம் பகுதிகளில் 2026-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் இ.கே.கோதண்டன்,எல்லாபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வேதகிரி
ஆகியோர் தலைமையில் கன்னிகைப்பேர், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை,கடையாக சென்றும் வீதி,வீதியாக சென்றும் வியாபாரிகள்,பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளரும்,கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.விஜயகுமார் கலந்து கொண்டு 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிச்சாமியை தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டு அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளர் இமயம் மனோஜ்,மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் மல்லியங்குப்பம் ராஜேஷ்,எல்லாபுரம் ஒன்றிய அவை தலைவர்கள் கன்னிகைப்பேர் உதயகுமார்,பெரியபாளையம் விஜயன்,ஒன்றிய துணைச்செயலாளர் சென்னங்காரனி மோகன்,இணைச்செயலாளர் வித்யா லட்சுமி வேதகிரி ,புன்னப்பாக்கம் ஜெயக்குமார்,கேசவன்,எம்.தனசேகர்,எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பாபு, ஒன்றிய இணை செயலாளர் சுபா பார்த்திபன், சுந்தர்ராஜன்,எஸ்.குமார் மற்றும் மாவட்ட,ஒன்றிய,கிளைக்கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சீனிவாசன்.