கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தமிழகத்தில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 3 ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இப்போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக ஆதரவு அளிக்கும் வகையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் V.P. மதியழகன் தலைமையில் கரூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் பலர் போராட்ட இடத்திற்கு வந்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுடன் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தங்களது ஆதரவை தெரிவித்தனர். உடன் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.