அரூர் நகராட்சியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் எம் எல் ஏ வே.சம்பத்குமார்
தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்பாட்ஷப்பேட்டையில் உள்ள பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ10 லட்சம் மதிப்பீட்டில் குனிஷியா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அரூர் எம்.எல்.ஏ வே.சம்பத்குமார் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர். ஆர். பசுபதி ,அரூர் அதிமுக நகர செயலாளர் ஏ.ஆர். எஸ் .எஸ் பாபு மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பல உடன் இருந்தனர்.