மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்.
தென்காசி: பிப் – 17
தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள
காட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கன்காட்சி நடைபெற்றது.
இக் கண்காட்சிக்கு பள்ளியின் நிர்வாகி. அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். ஹாஜி.வி.டி. எஸ். ஆர். முகம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் முகம்மது இஸ்மாயில் கண்காட்சியின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார்.
தலைமை ஆசிரியர் பாத்திமா ஹீசைனா வரவேற்றார். தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் வசந்தி கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் நல்லாசிரியர் சுரேஷ் குமார் மந்திரமா ? தந்திரமா ?செய்து காட்டினார். தாமிரபரணி கலைக்குழு மதியழகன் அறிவியல் பாட்டு, கதைகள், நாடகம் போன்ற நிகழ்வுகளைச் செய்து காட்டி சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொழிலதிபர். ஹாஜி. V.T.S.R. முகம்மது இஸ்மாயில் 175 மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். நிறைவாக அறிவியல் ஆசிரியர் சேக் ஒலி வாவா நன்றி கூறினார்.மாணவர்களை அறிவியல் ஆசிரியர் ஆமினா பேகம் சிறந்த முறையில் தயார் செய்து இருந்தார். மாணவர்கள் 75 படைப்புக்களை செய்து காண்பித்தனர்.ஆங்கில ஆசிரியை ஆமினா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.