தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420.

தாராபுரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கிய அமைச்சர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகர்மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினர்.

அப்போது அவர் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா என்பது ஒவ்வொரு தாய் வீட்டிலும் நடத்தப்படும் நிகழ்வை ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர் வரிசைகள் கொடுத்து தமிழக முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார். மேலும் தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை விரைவில் திறப்பு விழா காண உள்ளது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு புடவை உள்ளிட்ட பொருள்களை சீதனமாக ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அனுப்பும் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பொன்னாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவி, முன்னாள் எம்எல்ஏ பிரபாவதி பெரியசாமி, நகர அவை தலைவர் கதிரவன், அன்பழகன், ஆனந்தி, இந்திராணி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *